கேரள மாநிலம் மலப்புரத்தில் போதை ஊசி செலுத்திக் கொண்ட 10 பேருக்கு HIV கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாலாஞ்சேரியில் போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களிடையே வழக்கமான பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் HIV பாதிக்கப்பட்ட ஒரு நபரிடமிருந்து போதை ஊசியை பகிர்ந்து கொண்ட 9 பேருக்கு HIV பாசிட்டிவ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.