சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம், கோடையில் அதிகமாகவே இருக்கும். நமது உடைகள், வெயில் காலங்களில் நம்மை பாதுகாக்கவும், சிலநேரம் பழிவாங்கவும் செய்யும். அதற்கு உடையின் நிறமும் காரணம் என்பது உங்களுக்கு தெரியுமா?. ஆம்.. நாம் வெயிலில் செல்லும்போது, கருப்பு நிற ஆடை அணிந்தால், வெப்பம் உடையால் உறிஞ்சப்படும். இது உடலின் வெப்பத்தை அதிகரிக்கும். அதே நேரத்தில், வெண்மை நிற ஆடைகள், வெயிலை பிரதிபலித்து நம்மை பாதுகாக்கும். கோடையில் பருத்தி ஆடை நல்லது. பாலிஸ்டர் தவிர்க்கப்பட வேண்டியது.