தமிழகம் முழுவதும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (மார்ச் 28) தொடங்கவுள்ளது. இந்நிலையில், தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு தவெக விஜய் வாழ்த்து கூறியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுத உள்ள அன்புத் தம்பிகளுக்கு, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உற்சாகத்தோடும், துணிவுடனும், தன்னம்பிக்கையுடன் பொதுத்தேர்வினை எதிர்கொள்ளுங்கள்! வெற்றி நிச்சயம்!” என குறிப்பிட்டுள்ளார்.