திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பட்டாபிராமபுரம் கிராமத்தில் உள்ள நீர்ப்பாசனத் துறைக்கு சொந்தமான ஏரியிலிருந்து சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை 4 வழி சாலையாக விரிவுபடுத்தும் பணிக்காக அரசு அனுமதியுடன் லாரிகள் மூலம் கிராவல் மண் எடுத்து வருகின்றனர். விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக கிராவல் மண் எடுப்பதால் நீர் வரத்து பாதிக்கப்படுவதாக பட்டாபிராமபுரம் கிராம மக்கள் இன்று காலை வருவாய் கோட்டாட்சியர் தீபாவிடம் புகார் செய்தனர். நில அளவீடு செய்யும் வரை ஏரியிலிருந்து கிராவல் மண் எடுக்கக் கூடாது என்று கோட்டாட்சியர் உத்தரவிட்டார். ஆனால் மீண்டும் ஏரிலிருந்து கிராவல் மண் எடுத்து செல்வதை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி லாரியை சிறை பிடித்தனர் பின்னர் தகவல் அறிந்து வந்த வட்டாட்சியர் மலர்விழி கோட்டாட்சியர் தடை விதித்ததை மீறி குறிப்பிட்ட நான்கு லாரியில் இருந்த கிராவல் மண்ணை கொட்ட வைத்து விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக எடுத்திருப்பதை கணக்கீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிராவல் மண் எடுத்த நான்கு லாரிகளை ஏரியிலிருந்து எடுத்துச் செல்ல வட்டாட்சியர் உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.