ராஜஸ்தானின் பூண்டி மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. 10 ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி தனது வீட்டிற்கு வெளியே இருந்தபோது கடத்தப்பட்டு, காட்டுப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த வாரம் நடந்த நிலையில், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பிறகு, அதிகாலையில் கிராமத்தில் விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர். புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.