Top 10 viral news 🔥

தொடரை கைப்பற்றிய இந்திய அணி
இங்கிலாந்து அணிக்கெதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 305 என்ற சவாலான இலக்கை நோக்கிய விளையாடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் அதிரடி தொடக்கம் கொடுத்தனர். இவர்களை தொடர்ந்து வந்த பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாட, இந்திய அணி 44.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா வென்றுள்ளது.