

திருவள்ளூர்: கல்லூரியில் மாணவிகளிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
மாதவரத்தில் தனியார் பெண்கள் கல்லூரியில் மாணவிகளிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதவரத்தில் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் வடக்கு மண்டலம் சார்பில் தனியார் பெண்கள் கல்லூரி மாணவிகள் இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் லீமா ரோசாரியு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ் குமார், துணை ஆணையர் விஸ்வேஷ் பிசா ஸ்ரீ யாகியூர் கலந்துகொண்டு பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டுவது குறித்து உணர்வு செய்து தலைக்கவசத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டி துண்டு பிரசுரங்களை வழங்கினர். உதவி ஆணையர் சத்தியமூர்த்தி ஆய்வாளர்கள் சக்திவேல், சுடலைமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.