கேரளா மாநிலம், பாலக்காடு, மன்னார்காடு பகுதியில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது. நயடிக்குன்னு பகுதியை சேர்ந்த ஹம்சாகுட்டி, 6 வயது மகன் ஹனானுடன் சந்தபாடி பகுதிக்கு சென்றார். அங்கு சுசுகி ஆக்ஸஸ் 125 வாகனத்தில், இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அப்போது, திடீரென எஞ்சினில் தீப்பற்றியது. செல்போனை கவனித்தபடி இருந்த ஹம்சாகுட்டி, சுதாரித்து மகனைக் காப்பாற்றினார். இருவரும் லேசான தீக்காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் விரைந்து தீயை அணைத்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.