சாத்தான்குளம் வழக்கில் 2 மாதத்தில் தீர்ப்பு வழங்க வேண்டும் என கீழமை நீதிமன்றத்துக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தந்தை மகன் இரட்டை கொலை வழக்கில் சிறையில் உள்ள SI ரகு கணேஷ், ஜாமின் கேட்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் நேற்று தீர்ப்பளித்த மதுரை உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், இக்கொலை வழக்கின் விசாரணையை 2 மாதத்தில் கீழமை நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.