
பூந்தமல்லியில் 16 தேதி ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்
பூந்தமல்லி வட்டத்தில் வரும் 16-ஆம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் த. பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மக்களை நாடி குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீா்வு காண அரசு இயந்திரம் மக்கள் களத்திற்கே வரும் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை முதல்வா் அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். இந்தத் திட்டம் மூலம் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், ஒவ்வொரு மாதந்தோறும் (மூன்றாவது புதன்கிழமை) ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறியப்படும். அதேபோல் அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கத்தில் நடத்தப்படுகிறது. அதன்பேரில் திருவள்ளூா் மாவட்டத்தில் பூந்தமல்லி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடத்த தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா். இந்த முகாம் பூந்தமல்லி வட்டத்தில் வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் த. பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா்.