ஆவடி - Aavadi

சுரங்கப் பாதையில் மழை நீர் தேக்கம்: கலெக்டர் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில்13 செ. மி கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரின் பல ஏரி குளங்கள் நிரம்பின. இந்த நிலையில் ஆவடி அடுத்த பட்டாபிராம் சேக்காடு பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் 4 அடிக்கும் மேலாக மழை நீர் தேங்கி உள்ளதால் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள. சுரங்கப்பாதை மூடபட்டுள்ளதால் சேக்காடு, கோபாலபுரம், தென்றல் நகர், கரிமா நகர், ஆவடி, ஆவடி காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் சுமார் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதே போன்று ஆவடி, பட்டாபிராம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் செல்ல முடியாமலும், அவசர தேவைக்காக, மருத்துவ அவசரங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேங்கியுள்ள மழை நீரை மாநகராட்சி அதிகாரிகள் 3 ராட்சத மின்மோட்டார் கொண்டு வெளியேற்றி வருகின்றனர். இந்த நிலையில் ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி உள்ள நிலையில் அகற்ற மேற்கொள்ளப்பட்ட அதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆவடி மாநகராட்சி ஆணையர் கந்தசாமி, மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். பின்னர் மழை நீர் வடி கால்வாய்களை பார்வையிட்டு, மழை நீரை வெளியேற்றுவதற்கான உடனடி தீர்வை செய்யும்படி அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా