தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நடத்தும் வேலை நிறுத்தம் சற்று முன்னர் தொடங்கியது. புதிய வாடகை ஒப்பந்த விதிகளை தளர்த்துவது தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் நடக்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் தாமாக முன் வந்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.