கோவை: ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத நபர் பலி
சிங்காநல்லூர் |

கோவை: ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத நபர் பலி

கோவை ரயில்வே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரத்தினபுரி ரயில்வே மேம்பாலம் அருகே இன்று , அந்த வழியாக வந்த ரயிலில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அடிபட்டு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவர் ஒல்லியான உடல்வாகு மற்றும் சிகப்பு நிறம் கொண்டவர். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது இதுவரை தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், கோவை ரயில்வே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயிலில் அடிபட்டு இறந்தவர் பற்றிய தகவல் தெரிந்தால், கோவை ரயில்வே காவல் நிலையத்தை 9498101967, 9498108096 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று கோவை ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

வீடியோஸ்


தமிழ் நாடு