
சவுரிபாளையம்: சரக்கு ஆட்டோவில் இருந்த ரூ.80 ஆயிரம் அபேஸ்
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (48). இவர் சரக்கு ஆட்டோவில் ஆப்பிள் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று சௌரிபாளையம் பிரிவு பகுதியில் உள்ள ஹோட்டலின் முன்பு சரக்கு ஆட்டோவை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது ஆட்டோவில் வைக்கப்பட்டிருந்த விற்பனை தொகை 80 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து அவர் அங்குள்ள நபர்களிடம் இதுகுறித்து விசாரித்து பார்த்துள்ளார். யாருக்கும் தகவல் தெரியவில்லை. இது குறித்து சக்திவேல் ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனில் இன்று புகார் கொடுத்தார். புகாரை பதிவு செய்து கொண்ட காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.