வீடு வாங்குவதற்கான பணத்தை சேமிக்க தான் பணிபுரியும் இடத்தில் உள்ள ஓய்வறையை வாடகைக்கு எடுத்து யாங் (18) என்ற பெண் வசித்து வருகிறார். மாதந்தோறும் ரூ.34,570 சம்பாதிக்கும் யாங் வாடகையாக ரூ.545 மட்டுமே செலவழிக்கிறார். குளிப்பது, சமைப்பது, துணிகளை துவைப்பது, உறங்குவது என அனைத்து வேலைகளையும் அந்த சிறிய இடத்திலேயே செய்து கொள்கிறார். பணிநேரங்களில் மற்றவர்கள் ஓய்வறையை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தனது உடைமைகளை வேறு இடத்திற்கு மாற்றி விடுகிறார்.