விஜய் மனதில் பட்ட காயத்தின் வெளிப்பாடுதான் அவரின் பதில் என அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி.முனுசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த கேபி.முனுசாமி, "அதிமுக ஆட்சிக்காலத்தில் எந்த சிரமமும் இல்லாமல் விஜயின் படங்கள் வெளியானது. ஆனால், திமுக ஆட்சியில் அவர் படத்தை வெளியிட மிகவும் சிரமப்பட்டார். இதனால், மனம் வெதும்பிய காரணத்தினால் மேடையில் திமுக - தவெக இடையேதான் போட்டி என ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்" என்று கூறியுள்ளார்.