கர்ப்பிணிகளுக்கு அரசு பல திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் ஒன்றுதான் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா திட்டம். இந்த திட்டம் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், முதல் குழந்தையின் பிறப்பிற்காக ரூ.5000 உதவி வழங்கப்படுகிறது. மருத்துவமனையில் பிரசவத்திற்குப் பிறகு ரூ.1000 வழங்கப்படும். இரண்டாவது முறையாக கர்ப்பமாகி பெண் குழந்தை பெற்றால், அவருக்கு ஒரு முறை ரூ.6,000 வழங்கப்படும்.