மேட்டுப்பாளையம் - Mettupalayam

சமையல் செய்த போது தீ விபத்து; மூதாட்டி பலி

சமையல் செய்த போது தீ விபத்து; மூதாட்டி பலி

கோவை வடவள்ளி குருசாமி நகரை சேர்ந்தவர் ரோஹினி(76). ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவர் கடந்த மாதம் 23ம் தேதி காஸ் அடுப்பில் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீ பிடித்தது. உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் தீயை அணைத்து அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். உடலில் பலத்த தீ காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி ரோஹினி நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా