கவுண்டம்பாளையம் - Kavundampalayam

மூதாட்டி எரித்து கொலை; காவல்துறை விசாரணை

கோவை கணபதி அருகே உள்ள சக்தி சாலையில் அமைந்துள்ள அத்திப்பாளையம் பகுதியில் எரிந்த நிலையில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அப்பகுதி வழியாக சென்றவர்கள் நேற்று (செப்.,26) சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர். இறந்தவர் 60 முதல் 70 வயது வரையிலான மூதாட்டி என்றும், அவர் கொலை செய்யப்பட்டு முள்வேலி அருகே வீசப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில், குற்றவாளிகள் பெட்ரோல் அல்லது டீசல் போன்ற பொதுவான எரிபொருட்களை பயன்படுத்தவில்லை என்றும், அதனால்தான் உடல் முழுவதும் எரியவில்லை என்றும் தெரியவந்துள்ளது. வேறு ஏதோ வகையான எரிபொருள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. உடலை மேலும் ஆய்வு செய்வதற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சரவணம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலும் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా