"முந்தாநாள் கட்சி தொடங்கிய விஜய்க்கெல்லாம் பதில் சொல்ல முடியாது"

64பார்த்தது
திமுகவை மன்னராட்சி என்று தவெக தலைவர் விஜய் பேசியதற்கு திமுக பொருளாளரும் எம்பியுமான டி.ஆர்.பாலு பதிலடி கொடுத்துள்ளார். திருவள்ளூரில் 100 நாள் வேலைத்திட்ட ஊதிய நிதி வழங்க வலியுறுத்தி நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பின் டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "முந்தாநாள் கட்சி தொடங்கிய விஜயின் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. 64 வருடங்களாக கட்சியில் இருக்கிறேன், அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது" என காட்டமாக பேட்டியளித்துள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி