இன்றைய ஐபிஎல் போட்டியில் லீக் ஆட்டத்தில் MI மற்றும் GT ஆகிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி, பவுலிங் தேர்வு செய்தது. இதனையடுத்து முதல் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 63, ஜாஸ் பட்லர் 39, சுப்மன் கில் 38, ரன்கள் அடித்தனர். மும்பை அணி சார்பில், பாண்டியா 2, போல்ட், தீபக் சாகர், முஜீப், சத்யநாராயணா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் எடுத்தனர். மும்பை அணி வெற்றி பெற 197 ரன்கள் தேவை.