தாய்ப்பாலின் ருசியை கொண்டிருக்கும் ஐஸ்கிரீமை அமெரிக்காவை சேர்ந்த Frida என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஐஸ்கிரீமை பெற ஆர்டர் செய்து 9 மாதங்கள் வரை வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐஸ்கிரீமானது இனிப்பு, உவர்ப்பு சுவையுடன் கால்சியம், இரும்பு, வைட்டமின் பி, வைட்டமின் டி உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.