திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலையில், பாதுகாப்பு இன்றி ஆபத்தான முறையில் இளைஞர் ஒருவர் பயணம் செய்துள்ளார். இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் இரண்டு பெட்டிகள் வைக்கப்பட்டு, அதன்மேலே அமர்ந்து இளைஞர் ஒருவர் சாகச பயணம் மேற்கொண்டுள்ளார். இதனை சக வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்த நிலையில், சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில், அந்த இளைஞர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.