iQOO நிறுவனம் தனது புதிய ஐக்யூ இசட்10 (iQOO Z10) ஸ்மார்ட்போனை இந்தியாவில் வருகிற ஏப்ரல் 11ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் இந்த போனின் விலை மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. அதன்படி 6.7-இன்ச் குவாட் கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், 50எம்பி சோனி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா உள்ளிட்டவைகள் உள்ளன. 128ஜிபி மெமரி கொண்ட இந்த iQOO Z10 ஸ்மார்ட்போன் ரூ.21,999 விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.