மனித உடலில் மிகமுக்கியமான பித்தப்பை, பித்தநீரை சேமித்து, செரிமானத்துக்கு உதவுகிறது. கொழுப்புகளால் பித்தக்கல் அடைப்பு ஏற்பட்டால், அதை கவனிக்க சில அறிகுறிகள் இருக்கின்றன. விலா எலும்புக்கு கீழே கடும் வலி, மேல்முதுகு & வலது தோள்பட்டை வலி, குமட்டல்-வாந்தி உணர்வு, வயிறு உப்பசம் இருந்தால் மருத்துவரை நாடுவது நல்லது. சருமம், கண்கள் மஞ்சள் நிறமாக இருந்தால், தாமதிக்காமல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். வெளிர்ந்த நிற மலம், அடர்நிற சிறுநீர் வெளியேற்றமும் முக்கிய அறிகுறிகள் ஆகும்.