உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜில், மசூதியை சுத்தம் செய்யும் போது ஒரு இளைஞர் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார். மசூதியில் ஒரு முஅத்ஸின் ஆக இருக்கும் அந்த இளைஞர், மசூதியின் உச்சில் நின்று சுத்தம் செய்திருக்கிறார். அங்கிருந்து அவர் தவறி கீழே விழுந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.