மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட கொடிமரம் தெருவில் சிறுவன் நடந்து சென்றுள்ளார். அப்போது, அங்கு திரிந்த தெரு நாய் ஒன்று, திடீரென சிறுவனை கடித்துக் குதறியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் நாயை விரட்டியடித்து சிறுவன் பத்திரமாக மீட்டனர். இதில், பலத்த காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.