இந்தியாவில் ஆபாச பட நெட்வொர்க்கை செயல்படுத்தியதாக, டெல்லி நொய்டா தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். 5 ஆண்டுகளாக உஜ்வல் கிஷோர் - நீலு ஸ்ரீவஸ்தவா தம்பதி, சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து, அடல்ட் வெப்சைட் சேவை வழங்கி வந்துள்ளனர். மாடலிங் பெயரில் பெண்களை பணிக்கு எடுத்து, வருமானத்தில் 25% சம்பளம் கொடுத்து நிறுவனத்தையும் நடத்தியுள்ளனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், ED ரெய்டு நடந்தபின், விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது.