அமெரிக்காவின் புளாரிடாவில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) - செக் குடியரசின் ஜக்குப் மென்சிக் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் 6-7 (4-7), 6-4, 6-7 (4-7) என்ற செட் கணக்கில் ஜக்குப் மென்சிக்கிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.