மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இந்திய நேரப்படி இன்று (மார்ச்.29) காலை 11.53 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. நேற்று (மார்ச்.28) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.