சர்ரென இறங்கிய தக்காளி விலை.. வீதியில் வீசிச் சென்ற விவசாயிகள்

73பார்த்தது
சர்ரென இறங்கிய தக்காளி விலை.. வீதியில் வீசிச் சென்ற விவசாயிகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12 ஆயிரம் ஹெக்டேரில் தக்காளி சாகுபடி மேற்கொள்ளப் படுகிறது. அங்கு சராசரியாக 30 டன் மகசூல் கிடைக்கிறது. சந்தைக்கு வரத்தைப் பொறுத்து தக்காளி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தரத்தைப் பொறுத்து வியாபாரிகள் ஒரு கிலோ ரூ.3 முதல் ரூ.5 வரை கொள்முதல் செய்கின்றனர். குறைந்து விலைக்கு தக்காளி விற்பனையாவதால், வேதனையடைந்த விவசாயிகள் தக்காளியை சாலையில் வீசிச் சென்றனர். மேலும், தமிழக அரசு விவசாயிகளுக்காக ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி