ஆம்பூர் |

ஆம்பூர்: கல்குவாரி லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்

ஆம்பூர் அருகே கல்குவாரி லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கல்குவாரியில் இருந்து கொண்டு வரப்படும் எம். சாண்டினால் (ஜல்லி துகள்கள்) விவசாய நிலங்களை பெரிதும் பாதிக்கப்படுகின்றன என விவசாயிகள் வேதனை. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட காட்டுக்கொல்லை பகுதியில் செயல்பட்டு வரும் ஐயப்பன் என்பவருக்கு சொந்தமான அண்ணாமலை தனியார் கல்குவாரியில் இருந்து கொண்டு வரப்படும் எம் சான்ட் அங்குள்ள விவசாய நிலங்களுக்கு அருகில் மலைபோல் கொட்டி குவித்து வைத்திருப்பதால் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதை கண்டித்தும், கோயிலுக்கு சொந்தமான வழி பாதையில் கல்குவாரி லாரிகள் வரக்கூடாது என தடுத்து நிறுத்தி லாரிகளை சிறைப்பிடித்து 50 க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆம்பூர் கிராமிய காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடமும், கல்குவாரி உரிமையாளரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

வீடியோஸ்


தமிழ் நாடு