விழுப்புரம்: தேமுதிக பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய பிரபாகரன், “அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கும் போது 2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவுக்கு சிங்கிள் டிஜிட்டில் தான் சீட்டு கொடுப்பார்கள், அதனால் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என சில ஊடகங்கள், அரசியல் விமர்சகர்கள் சொல்கின்றனர். அதை நாங்கள் பார்த்து கொள்கிறோம். நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் புதிய கட்சியை பார்த்து பயப்பட மாட்டோம்” என்றார்.