திருவண்ணாமலை: கீழ்ப்பட்டு கிராமத்தில் அடிக்கடி மின்சாரம் தடைப்படுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து கிராமத்தை சேர்ந்த நபர் கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு புகார் செய்துள்ளார். தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் இருவர் அவரின் வீட்டிற்கு நேரில் வந்தனர். பின்னர் புகார் கொடுத்த நபரை இருவரும் மிரட்டினார்கள். ”மீண்டும் இது போல புகார் கொடுக்கக்கூடாது. என் மச்சான் போலீஸ்காரர்" என ஒருமையில் பேசினர்.