தேனி மாவட்டம் போடி மெட்டு சோதனைச் சாவடி அருகில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 60 அடி பள்ளத்தில் விழுந்த கார் தீப்பற்றியதில் முழுவதும் எரிந்து நாசமானது. நல்வாய்ப்பாக காரில் இருந்த 4 பேரும் நூலிழையில் உயிர் தப்பினர். காரில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டதில் இருவர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.