தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே சாலையில் சென்ற பைக்கை, போக்குவரத்து போலீசார் நிறுத்த முயன்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த பைக், கீழே விழுந்தது. அப்போது, அந்த வழியாக சென்ற பேருந்து ஒன்று பைக் ஓட்டுநர் மீது ஏறியது. இதில், பைக்கில் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், போக்குவரத்து போலீசாரின் அலட்சியத்தால் வாகன ஓட்டி உயிரிழந்தாக கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.