கொசுத்தொல்லை என்பது நாடுகள் என்ற பிரிவினையை கடந்தது. ஒவ்வொரு வீட்டிலும் மாலை நேரத்தில் அழையா விருந்தாளியாக வரும் கொசு பலரின் ரத்தத்தை குடித்து உயிர் வாழ்கிறது. இதனிடையே, உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தான் தினமும் அடிக்கும் கொசுவை மணிக்கணக்கில் தேதி வாரியாக சார்ட்டில் சேகரித்த வீடியோ வெளியாகியுள்ளது. தான் எந்த நேரத்தில்? எங்கு அந்த கொசுவை அடித்தேன் என்ற விபரத்தையும் சிறுமி குறித்து வைத்துள்ளார்.