DC அணிக்கெதிரான போட்டியில் MI அணி 12 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 206 ரன்களை சேஸ் செய்த DC அணி, கருண் நாயர் மற்றும் அபிஷேக் பூரலின் அதிரடி ஆட்டத்தால் எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், MI அணியின் அதிரடி பௌலிங்கால் DC அணி 19 ஓவர்களில் 193 ரன்கள் எடுத்த நிலையில், ஆல் அவுட்டானது. கருண் நாயர் 89 மற்றும் அபிஷேக் பூரலின் 33 போராட்டம் வீணானது. MI அணியின் கரண் சர்மா 3, சாட்னர் 2, தீபக் சாஹர் மற்றும் பும்ரா தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.