இந்திய கிரிக்கெட்டர் ஹர்திக் பாண்டியா, தற்போது ஐபிஎல் தொடரில் MI அணியை கேப்டனாக வழிநடத்தி வருகிறார். கடந்த பெண்கள் பிரீமியர் லீக் தொடரின்போது, குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் சார்பில் விளையாடிய கஷ்வீ கெளதம் கிரிக்கெட் பேட் வேண்டும் என பாண்டியாவிடம் கேட்டிருந்தார். இந்நிலையில், இன்று (ஏப்.13) ஹர்திக் பாண்டியா 1100 கிராம் எடையுள்ள தனித்துவமான பேட் ஒன்றை கஷ்வீக்கு பரிசளித்து வாழ்த்தினார்.