திருவள்ளூரில் இயற்கை வேளாண் பொருள் கண்காட்சி தொடக்கம்

77பார்த்தது
திருவள்ளூரில் இயற்கை வேளாண் பொருள் கண்காட்சி தொடக்கம்
திருவள்ளூரில் இயற்கை வேளாண் பொருள் கண்காட்சியை அம்மாவட்ட ஆட்சியர் பிரதாப் தொடக்கி வைத்தார். திருவள்ளூர் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, மாவட்ட இயற்கை உழவர்கள் சார்பில் கண்காட்சி இன்று ஏப்.13 நடைபெற்றது. உழவர்கள் இயற்கை முறையில் விளைவித்த நஞ்சில்லா உணவு தானியங்கள், பழவகைகள் மற்றும் காய்கறிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். மேலும், மாதந்தோறும் 2-வது ஞாயிற்றுக்கிழமை இயற்கை வேளாண் பொருள்கள் கண்காட்சி நடத்தப்படும் என ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி