ஜீவா கார் விபத்து - பைக் ஒட்டுநர் மீது வழக்குப்பதிவு
கள்ளக்குறிச்சி அருகே நடிகர் ஜீவா பயணித்த கார் விபத்திற்குள்ளான வழக்கில் இருசக்கர வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சின்னசேலம் அருகே ஜீவா ஓட்டிச் சென்ற காரின் குறுக்கே வந்து விபத்தை ஏற்படுத்திய மணிகண்டன் என்பவர் மீது ஜீவா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விபத்தில் ஜீவா பயணித்த காரின் முன்பக்கம் கடுமையாக சேதம் அடைந்தது. ஜீவா மற்றும் அவரின் மனைவி நல்வாய்ப்பாக தப்பினர்.