விளையாடுவதால் குழந்தைகளுக்கு கிடைக்கும் நன்மைகள்
விளையாட்டு, உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதுடன் மன அழுத்தம் உருவாக்கும் ஹார்மோனை மாற்றும் வல்லமையையும் தருகின்றன. குழந்தைகள் விளையாடுவதால் ரத்த ஓட்டம் மேம்படுவதுடன், உடலில் திசு இறுக்கம், பிடிப்பை உருவாக்கும் லேக்டிக் அமிலம் வெளியேறுகிறது. இதனால் குழந்தைகளுக்கு சுறுசுறுப்பு, வளர்சிதை மாற்றும் அதிகரித்து, ஜீரண சக்தி மேம்படுகிறது. விளையாடுவது, அவர்களது உடலுக்கு, கால்களுக்கு, மனதுக்கு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.