
66 வயதில் 10வது குழந்தை பெற்ற பெண்
ஜெர்மன் நாட்டை சேர்ந்த அலெக்சாண்ட்ரா என்பவர் தனது 66 வயதில் 10வது குழந்தையை பெற்றெடுத்து உலகையே ஆச்சரியப்பட வைத்துள்ளார். தனது 50 வயதிற்கு பிறகே இவருக்கு 8 குழந்தைகள் பிறந்துள்ளனர். இவரின் மூத்த மகள் ஸ்வெடனாவிற்கு 46 வயதாகிறது. ஆரோக்கியமான உணவும், வாழ்க்கை முறையுமே இந்த வயதிலும் தான் இயற்கையான முறையில் கருத்தரிக்க காரணம் என அலெக்சாண்ட்ரா கூறியுள்ளார்.