மகனை கடித்த பாம்புடன் வந்த தாய் (வீடியோ)

17428பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே திப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் பூவரசன் (17). குப்பை அள்ளி அங்கிருந்த கிடங்கில் கொட்டினார். அப்போது குப்பைக்குள் மறைந்திருந்த சுமார் 1½ அடி நீளமுள்ள குட்டி பாம்பு பூவரசனை கடித்தது. கடித்த பாம்பை லாவகமாக பிடித்து ஒரு தண்ணீர் பாட்டிலில் அடைத்தனர். பின்னர் பூவரசனை அவரது தாய் போச்சம்பள்ளி மருத்துவமனைக்கு அழைத்து வரும் போது பாட்டிலில் அடைத்த பாம்புடன் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.