குளத்தில் கொட்டப்படும் கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாயம்

74பார்த்தது
குடவாசல் அருள்மிகு சீனிவாச பெருமாள் கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலுக்கு அருகே புண்ணிய தீர்த்தமாக விளங்கிய 'பாப்பா குளம்' உள்ளது.
தற்பொழுது இந்த புண்ணிய தீர்த்தமான 'பாப்பா குளம்'
பலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது.
பாப்பா குளம் ஒரு காலத்தில் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்தது என்றும். குளிப்பதற்கும் குடிப்பதற்கும் பயன்பட்டு வந்தது என்றும். தற்பொழுது அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து சாக்கடை கழிவுநீரும். அருகே உள்ள பேருந்து நிலையத்தில் இருக்கும் டீக்கடை குப்பைகள் கோழிக் கடைகளில் இருந்து கழிவுகள் குளத்தில் கொட்டப்படுவதால் துர் நாற்றம் வீசுவது மட்டும் அல்லாமல் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியை சார்ந்த சமூக ஆர்வலர் ராஜசேகர், மற்றும் குருநாதன் ஆகியோர் சொல்லும்போது. "குளம் அமைந்திருக்கும் வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்து செல்லும் நிலை உள்ளது என்றும், இதனால் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் ஆக்கிரமிப்பு செய்த குளத்தை மீட்டு குளத்தை சுத்தப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி