உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த மா.கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, “நல்ல நண்பரை இழந்து விட்டேன். இந்தியாவின் சித்தாந்தத்தை பாதுகாப்பதில் அக்கறையும், ஆழ்ந்த புரிதலும் கொண்டவர். அவருடன் நீண்ட நேரம் உரையாடுவதை இனி Miss செய்வேன். அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்” என பதிவிட்டுள்ளார்.