அதிமுக வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

98692பார்த்தது
அதிமுக வழக்கில் பரபரப்பு தீர்ப்பு
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில், கடந்த ஆண்டு ஜுலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பளித்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு எதிரொலியாக அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி