மன்னார்குடி நகராட்சியில் பணிபுரியும் ராஜேஷ் கண்ணன் என்பவர் ஒப்பந்த துப்புரவு பணியாளருக்கு அதிக வேலைப்பளு தருவதாக நகராட்சி ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் ஒப்பந்த துப்புரவு பணியாளரை ராஜேஷ் கண்ணன் தாக்கியதாக கூறி இன்று காலை நகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு மன்னார்குடி பேருந்து நிலையத்தில் தூய்மை பணி மேற்கொண்ட துப்புரவு பணியாளரை ராஜேஷ் கண்ணன் தாக்கும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.