படுத்திருந்தவர் மீது ஏறிய கார் (வீடியோ)

230296பார்த்தது
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. ஹரிபர்வத் பகுதி காந்தி நகர் காலனியில், திங்கள்கிழமை இரவு ஒருவர் குடிபோதையில் சாலையில் படுத்துக்கிடந்தார். அவ்வழியாக வந்த கார் படுத்திருந்தவர் மீது ஏறியது. இதில் படுகாயமடைந்த இளைஞரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காரை ஓட்டிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.