2 நாட்களுக்கு முன்பே ஃபிரிட்ஜை அணைத்து கதவுகளை திறந்து விட வேண்டும். ஒரு கிண்ணத்தில் சோடா உப்புடன், எலுமிச்சை சாறு கலந்து அந்த கலவையை எலுமிச்சை பழத்தின் தோலை வைத்து நன்றாக ஃப்ரிட்ஜில் தேய்க்கவும். 10 நிமிடங்கள் ஊறிய பின்னர், தண்ணீரில் துணியை நனைத்து ஃப்ரிட்ஜை நன்றாக துடைக்கவும். பின்னர் ஈரம் நன்றாக காய்ந்த பிறகு, ஃப்ரிட்ஜை மூடி சுவிட்சை ஆன் செய்யவும். 2 மாதங்களுக்கு ஒரு முறை இப்படி செய்தால் பிரிட்ஜ் சுத்தமாக வாடை வீசாது.